அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோள்... மகாபலிபுரத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது..!! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளி மாணவர்கள் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட 150 சிறிய ரக செயற்கைக்கோள்கள் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை அடுத்த மகாபலிபுரத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது..!!

ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு மற்றும் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை உதவியுடன் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவில் மாணவர்கள் தயாரித்த சிறிய ரக சேர்க்கை கோள்கள் மற்றும் ராக்கெட் மகாபலிபுரம் அருகே உள்ள பட்டிபுலம் பகுதியில் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகி ஷேக் சலீம் "காற்றிலுள்ள மாசு அளவு, காற்றின் தரம், வெப்பநிலை, ஆக்சிஜன் மற்றும் கதிர்வீச்சின் அளவு உள்ளிட்ட தகவல்களை சிறிய ரக சேர்க்கை கோள்கள் சேகரிக்கும்" என தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 19ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறும் செயற்கைக்கோள் ஏவும் நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், இஸ்ரோ அதிகாரிகள், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அரசு மேல் பள்ளி மாணவர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள 150 சிறிய ரக சேர்க்கை கோள்கள் விண்ணில் ஏவப்படும் நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

150 satellites made by govt school students launching near Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->