கழிவுநீர் தொட்டி மரணங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு! வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டடங்கள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் நியமிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சமீப காலங்களில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்வதன் மூலம் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டி, கட்டிடங்கள் கழிவுநீர் பாதைகளில் இறங்கி சுத்தம் செய்ய தனிநபர் நியமித்தால் புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியாமல் தனிநபரை நியமித்து சுத்தம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர் பொறுப்பேற்றுக்கொண்டு அவருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் தொட்டியை தனிநபர் கொண்டு சுத்தம் செய்வது பொதுமக்களுக்கு தெரிந்தால் 14420 என்ற எண்ணிற்கு புகார் செய்யலாம் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 lakh compensation for sewer tank deaths


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->