தென்காசியில் இன்று முதல் 144  தடை உத்தரவு - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தென்காசியில் இன்று முதல் 144  தடை உத்தரவு - காரணம் என்ன?

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து, நெற்கட்டும் சேவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி செப்டம்பர் முதல் தேதி நடைபெற உள்ளது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்காக தென்காசி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என்று ஏராளமானோர் பங்கேற்க வருகை தருவர். 

அப்போது, சட்ட ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

இந்த வகையில், இன்று மாலை முதல் ஆகஸ்ட் 21 வரையிலும், ஆகஸ்ட் 30 மாலை முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரையிலும் தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊர்வலங்கள், அன்னதானம், பொங்கலிடுதல், பால் குடம் எடுத்தல் என்று பல்வேறு வகையான வாடகை வாகனங்கள், சுற்றுலா மோட்டார் வண்டிகள், டூரிஸ்ட் மேக்ஸி வண்டிகள் உள்ளிட்டவை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

144 ban on tenkasi from today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->