சென்னையை அலறவிட்ட வடக்கிருந்து வந்த 11 புள்ளிங்கோ கூண்டோடு கைது! வெளியான ஆச்சர்யமான தகவல்!  - Seithipunal
Seithipunal


சென்னையை கலக்கிய ஆந்திராவைச் சேர்ந்த செல்போன் கொள்ளையர்கள், சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 5000 செல்போன்களை கொள்ளையடித்ததாக தகவல் வெளியாகியதுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த  செல்போன்களை கொள்ளையடிக்க ஒரு நிறுவனம் போல நடத்தி வந்துள்ளார்கள். அதனையே வேலையாகவும் செய்துள்ளார்கள். செல்போன் கொள்ளை அடிக்கும் ஒவ்வொருவருக்கும் வார சம்பளமாக ரூ.5000 முதல் ரூ.6000 வரை வழங்கியதும் தெரிய வந்துள்ளது. 

ஒரு நாளுக்கு சென்னை நகரில் மட்டும் குறைந்தது 40 முதல் 50 செல்போன்களை இந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கும்பலின் தலைவனாக ரவி என்பவன் செயல்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கும்பல் தலைவன் ரவி இன்று கைது செய்யப்பட்டுள்ளான்

ஆந்திரா விஜயவாடா ஆட்டோ நகர் கிராமத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் தலைவர் ரவி மற்றும் விஜயவாடாவை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களை சென்னை யானைகவுனி போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

சென்னையில் மொபைல் போன் திருட்டு என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வந்த நிலையில், இப்படி திட்டம் போட்டு, ஒரு நிறுவனம் போல ஊதியத்திற்கு திருடியது ஆச்சர்யம் அளித்தாலும், அதிர்ச்சியும் அளிக்கிறது. 

இதுபோன்ற செயல்களினால் பிற மாநில மனிதர்களை கண்டாலே சென்னையில் இருப்பவர்களுக்கு அச்ச உணர்வு ஏற்படுவதனை தடுக்க முய்யவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 Cellphone robbers arrested in Chennai they are from Andhra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->