திருவண்ணாமலையில் சுவர் இடிந்து விழுந்து 10 பக்தர்கள் காயம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவை காண்பதற்காக உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இந்த தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனைக் காண்பதற்கு நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.

இதையடுத்து இன்று மாலை ஆறு மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்தக் கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

ஆனால், 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான அனுமதிச்சீட்டு அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனுமதிச்சீட்டைப் பெறுவதற்கு பக்தர்கள் முண்டியத்துக் கொண்டு வருவதால் பக்தர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சில பக்தர்கள் கல்லூரியின் சுற்றுச்சுவர் மீதும் ஏறி குதித்தனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பக்தர்கள் வரிசையில் நிற்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளும் உடைக்கப்பட்டதனால் பக்தர்களை தடுக்க போலீசார் திணறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 devotees injured wall collapse in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->