உலக கோப்பை டி20 தொடரில் 11 பவுளர்களுடன் களம் இறங்கிய அணி! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. மொத்தம் 45 போட்டிகள் இந்த உலக கோப்பையில் நடைபெற உள்ளது. நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் அரையணி ஆட்டங்கள் சிட்னி மற்றும் அடிலட்டில் நடைபெற உள்ளன இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

உலக கோப்பையில் பங்குபெறும் அணிகள் வீரர்களை தேர்வு செய்வதில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயம் மற்றும் பயணத்தில் ஏற்படும் சிக்கல் காரணமாக சில வீரர்கள் உலக கோப்பையில் பங்கு பெற முடியாத சூழல் நிலவு வருகிறது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். இதனால் 15 வது வீரரை இந்திய அணி தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவியது. இறுதியில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டார். 

இந்திய அணியில் ஒரு பவுளர் தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. ஜிம்பாப்வே அணி உலக கோப்பையில் விளையாட உள்ள அணியில் 11 பவுளர்களை தேர்வு செய்துள்ளது. ஜிம்பாப்வே அணியில் 2 பேட்ஸ்மேன்கள் மற்றும் 2 விக்கெட் கீப்பர்களை தவிர 6 ஆல்ரவுண்டர்கள் மற்றும் 5 பவுளர்களுடன் உலக கோப்பையில் களமிறங்க உள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி இத்தகைய சுவாரஸ்ய அணியின் அமைப்பில் உலகக் கோப்பை போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zimbabwe team playing World Cup T20 series team with 11 bowlers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->