ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த சாஹல்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் நடப்பு சீசனில் 20 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. இதில் ஹெட்மையர் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். மேலும், படிக்கல் 29 ரன்னும், .அஸ்வின் 28 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே கே எல் ராகுல் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து இறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஹோல்டர் 8 ரன்னிலும், தீபக் ஹூடா 25 ரன்னும்,  ஆயுஷ் பதோனி 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், டிகாக் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். குருணால் பாண்ட்யா 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி இறுதியில் ஸ்டோய்னிஸ் போராடி 4 சிக்சர் உட்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து லக்னோ தோல்வி அடைந்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில்  சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 6வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார். இந்த பட்டியலில் பிராவோ - 173, மலிங்கா - 170, அமித் மிஸ்ரா - 166, பியூஷ் சாவ்லா - 157, ஹர்பஜன் சிங் -150 என முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yuzvendra Chahal 150 wickets for IPL 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->