#ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : தாய்லாந்தை பந்தாடிய இந்திய மகளிர் அணி அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஏழு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 போட்டிகளில் 4 வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், 5 போட்டிகளில் விளையாடியுள்ள தாய்லாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெற்ற19வது லீக் போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தாய்லாந்து அணி இந்திய மகளிர் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகியுள்ளது. சினே ராணா 3 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா மற்றும்  ராஜேஸ்வரி கயக்வாட் தலா 2 விக்கெட்டுகளும், மேக்னா சிங் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்து. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசி  3 விக்கெட் வீழ்த்திய சினே ராணா ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்மிருதி மந்தனா இன்றைய போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய அணிக்காக 100 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனையடுத்து அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens Asia Cup india beat Thailand by 9 wickets


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->