சிஎஸ்கே பிளேயிங் XIல் விளையாட போவது யார் ? களமிறக்கப்படுவாரா தாக்கூர்! - Seithipunal
Seithipunal


CSK vs SRH : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து முஸ்தாஃபிசுர் ரஹ்மான் விலக்கியதால், அவரது இடத்தில் யார் களமிறக்கப்படுவார்  என்ற கேள்வி " CSK " ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

2021ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய  ஷர்துல் தாக்கூர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்புல் கேப்பை வென்றார் .  2021  சீசனின்  சிஎஸ்கே  சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு ஷர்துல் தாக்கூர் முக்கிய பங்காற்றினார். 

நடப்பாண்டு ஐபில் ஏலத்தில் ஷர்துல் தாக்கூர் மீண்டும் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். அணிக்குள் ஷர்துல் தாக்கூர் வருவதன் மூலமாக  சென்னை அணி பலம்பெறும். ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணி வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் ஷர்துல் தாக்கூர் என்பது குறிப்பிடத்தக்கது . அபாரமான ஃபார்மில் இருப்பதால், நிச்சயம் ஷர்துல் தாக்கூரின் பவுலிங் சிஎஸ்கே அணிக்கு பலனளிக்கும். அதேபோல் இரு பக்கமும் ஸ்விங் செய்யும் திறமை இருப்பதால், ஷர்துல் தாக்கூரால் பவர் பிளே ஓவர்களிலும் பவுலிங் செய்ய முடியும்.

மிடில் ஓவர்களிலும் பார்ட்னர்ஷிப்பை உடைக்க ஷர்துல் தாக்கூர் முக்கிய பவுலராக விளங்குவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர் . அதேபோல் கிளாசன் போன்ற அதிரடி வீரர்களை ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், சிஎஸ்கே அணியின் பேட்டிங் லைன் அப் இன்னும் பலம் பெறும். கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரரையும் சிஎஸ்கே அணியில் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 சிஎஸ்கே அணியின் நச்சத்திர வீரர் " முஸ்தாஃபிசுர் ரஹ்மான் " விசா பிரச்சனை காரணமாக வங்கதேசம் சென்றுள்ளார்.ஆதனால் , வரும் தொடர்களில் அவருக்கு பதிலாக பிளேயிங் XIல் ஷர்துல் தாக்கூர் களமிறக்கப்படலாம் என்று எதிர்பாக்கப்படுகின்றது.

இந்த சீசனில் முதல் மேட்ச்  விளையாட உள்ளதால், தீவிர பயிற்சில் தாக்கூர் ஈடுபட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who will play in CSK playing 11 Thakur will be shocked


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->