மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதலில் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. அதன்படி, முதல் ஒரு நாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு போர்ட்ஆஃப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, மொகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இதனால், இளம் வீரர்களுக்கு இந்தத் தொடர் சிறந்த வாய்ப்பாக இருக்கக்கூடும்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவானுடன் இஷான் கிஷன் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படுவார்கள். ஷிகர் தவான் கடைசி ஐந்து ஆட்டங்களில் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த தொடரில் அவர் அதிக அளவில் ரன்களை எடுத்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும். இல்லாவிட்டால் அவர் இடம் கேள்வி குறிதான். மிடில் ஆர்டர் வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் வலுவாக உள்ளனர். பந்து வீச்சில் ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் உள்ளனர்.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

ஷிகர் தவான்(கேப்டன்),  ருதுராஜ் கெய்க்வாட் அல்லது இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், ஜடேஜா அல்லது அக்‌ஷர் பட்டேல், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, சாஹல், முகமது சிராஜ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Indies vs India ODI Match Team india


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->