பரபரப்பான நேரத்தில் தோனி குறித்து, மனம் திறந்தார் விராட் கோலி! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில், இந்திய அணி நாளை அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி வந்துள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள்  கைகொடுக்க, புள்ளி பட்டியலில் முதலிடத்துடன் இந்திய அணி எளிதாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. 

இடையில் சில ஆட்டங்களில் மட்டும் தோனியின் ஆட்டம் இந்திய அணிக்கு தேவைப்பட்டது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியைத் தழுவியது. அந்த போட்டியில் தோல்வியை தழுவ காரணம் மூத்த வீரர் தோனி மந்தமாக விளையாடியது தான் என பலரும் குற்றம் சாட்டினார்கள். அவர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார்கள். இதனிடையே தோனி ஓய்வு பெறப் போகிறார் என்றெல்லாம் செய்திகளையும் வெளியிட ஆரம்பித்தார்கள்.

ஆனால் இந்திய அணி நிர்வாகமோ, இந்திய அணியோ எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் நேற்று தன்னுடைய 38வது பிறந்தநாளை நிறைவு செய்த இந்திய அணியின் மூத்த வீரர் தோனிக்கு, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதில் "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹி பாய், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அர்த்தத்தை மிகச் சிலரே சரியாக புரிந்துகொள்கிறார்கள், உங்களுடன் பல ஆண்டுகளாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எப்போதுமே எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய சகோதரராக இருந்தீர்கள், நான் முன்பு கூறியது போல், நீங்கள் தான் எப்போதும் என்னுடைய கேப்டனாக இருப்பீர்கள்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்திய அணியின் கேப்டன் கோலி ஆதரவு இருப்பது இதன் மூலம் தெரிய வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat kohli wishes to MS Dhoni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->