கடும் கோபத்தில் குத்துவிட்ட விராட் கோலி.! பின்னர் கைதட்டி கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, இந்திய அணியில் விராட் கோலி அரைசதம் கண்டு, ராபின்சன் பந்துவீச்சில் எப்போதும் போல 'எட்ஜ்' கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) 57 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்க்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். முக்கியமாக ரூட் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். நிதானமாக ஆடிய மலான் 31 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 37 ரன்னும், மொயீன் அலி 35 ரன்னும் எடுத்தனர். ஒல்லி போப் அரை சதமடித்து 81 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார். இங்கிலாந்து அணி இறுதியில் முதல் இன்னிங்சில் 290 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதனையடுத்து, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை பொறுப்புடன் ஆடியது. கே எல் ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை ஆடி 127 ரன்கள் எடுத்தபோது கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து, அரைசதம் கண்ட புஜாரா 61 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். 

நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மீண்டும் அவுட்-சைடு-எட்ஜ் மூலமே விராட் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடர்ந்து ஒரே மாறியாக ஆட்டமிழந்து வரும் விரக்தியில் பெவிலியன் திரும்பிய விராட் கோலி.  டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த கதவை ஓங்கி ஒரு குத்துவிட்டார். கண்ணாடிக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் இந்து குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விராட் கோலி விக்கெட் இழப்புக்கு பின், இதனையடுத்து ரிஷப் பந்த் உடன் கைகோர்த்த அதிரடி மன்னன் ஷர்துல் தாகூர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது விராட் கோலி அவர்களின் ஆட்டத்தை கண்டு மிகுந்த உற்சாகத்துடன் கைத்தட்டி கொண்டாடினார். ஷர்துல் தாகூர் (பவுண்டரி 6, சிக்ஸர் 1) அசத்தலாக அரைசதம் அடித்தார். 70 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பும்ரா 25 ரன்களுக்கும், உமேஷ் யாதவ் 25 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்சில் 466 ரன்களை குவித்துள்ளது. 

இங்கிலாந்து அணி 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி நேற்றைய ஆட்டநேர முடிவில் 77 ரன்களை சேர்த்துள்ளது. இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டம் வெற்றியை தீர்மானிக்கும் ஆட்டம் என்பதால் இரு அணி ரசிகர்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காது உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli wicket video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->