ஜூனியர் உலகக் கோப்பை : இறுதி போட்டிக்கு செல்லுமா இந்திய அணி? இன்று மாலை பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

16 அணிகள் பங்கேற்று உள்ள 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆண்டிகுவாவில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. 19 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி 4 முறையும் ஆஸ்திரேலிய அணி மூன்று முறையும் சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கின்றன.

இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளை வென்று கால் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. கொரோனா தொற்று காரணமாக கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ரஷீத் உட்பட 5 வீரர்கள் ஆட்டத்தில் களம் இறங்க முடியாத சூழ்நிலையிலும், உகாண்டா, அயர்லாந்து அணிகளுக்கு எதிராக எஞ்சியிருந்த வீரர்களை கொண்டு களம் இறங்கிய இந்திய அணி மலைக்கவைக்கும் ரன்களை குவித்து, வியக்க வைக்கும் வெற்றியை எளிதில் பெற்றது.

கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி லீக் ஆட்டங்களில் இரண்டு வெற்றியும் ஒரு தோல்வியும் கண்டு கால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கால் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஏற்கனவே நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங் பவுலிங் என சம பலத்துடன் திகழ்கின்றன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது, இந்திய அணி வீரர்களுக்கு சற்று தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும். 

இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 5 - ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

U19 WORLD CUP IND V AUS SEMI FINAL


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->