#TNPL2022 : இன்று தொடங்குகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்.! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎல் 6-வது 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று முதல் (ஜூன் 23) ஜூலை 31-ஆம் தேதி வரை கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் சேலம் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

இதில், இன்று இரவு 7.15 மணிக்கு நெல்லையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்  அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடுகிறது.

இதுவரை நடந்துள்ள 5 தொடர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 முறையும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (தற்போது சேலம் ஸ்பார்டன்ஸ்), மதுரை பாந்தர்ஸ் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி ரத்து செய்யப்பட்டது.

மேலும், டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியை காண 100 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPL 2022 starts today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->