டி.என்.பி.எல் இறுதிப்போட்டி.. மழையால் போட்டி கேன்சல்.. கோப்பையை பகிர்ந்துக்கொண்ட 2 அணிகள்.! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎல் 6-வது 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 23 தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் சேலம் ஆகிய மைதானங்களில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரண்டு அணிகளும் சாம்பியன் என அறிவிக்கப்பட்டது.

இந்த இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது. இதில், மழை குறுக்கிட்டதால் 17 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து 17 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கிங்ஸ் விளையாடியது. அந்த அணி 4 ஓவர்களில் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த போது மீண்டும் மழை மீண்டும் குறுக்கிட்டது.

அதன்பின் மழை நிற்கவில்லை என்பதை அடுத்து இறுதி போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPL 2022 kovai and chepak share the championship


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->