டி20 உலகக்கோப்பை : அரையிறுதிக்கு தகுதிபெறப்போவது யார்.? இந்தியாவா? பாகிஸ்தானா? முழு விபரம்.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

டி20 உலக கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற அனைத்து அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

அந்த வகையில் குரூப் 2 பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் வீழ்த்தியதன் மூலம் குரூப் 2 பிரிவில் இருந்து எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இதில், குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும் உள்ளது.

அந்த வகையில் கடைசி லீக் போட்டியில் இந்தியா ஜிம்பாபே அணியையும், தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தையும் வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. 

இறுதி லீக் போட்டியில் இந்தியா ஜிம்பாபே அணியிடம் தோல்வியடைந்து, தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்தை வீழ்த்தி, பாகிஸ்தான் பங்களாதேஷை வீழ்த்தினால், இந்தியா, பாக்கிஸ்தான் இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் இருக்கும் போது, ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் தகுதி பெறும். இந்தியா வெளியேறும்.

அதே சமயம் இந்தியா ஜிம்பாபே அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் பங்களாதேஷை வீழ்த்தி, நெதர்லாந்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதி செல்லும், தென்னாப்பிரிக்கா வெளியேறும்.

மழையும் யார் செல்ல வேண்டும் என்பதில் முக்கிய பங்காற்றும். இந்தியா ஜிம்பாபே ஆட்டம் தடைபட்டாலும் அரையிறுதி செல்லும், பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆட்டம் தடைபட்டால் பாகிஸ்தான் வெளியேறும்.

தென்னாப்பிரிக்கா நெதர்லாந்து ஆட்டம் தடைப்பட்டு, பாகிஸ்தான் பங்களாதேஷை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால், ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதி செல்லும். தென்னாப்பிரிக்கா வெளியேறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup group 2 which team qualify to semifinal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->