அனைத்து டி20 உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்றே ஒரே வீரர் - அட அது நம்ம சிக்ஸர் மன்னன் தானா! - Seithipunal
Seithipunal


அனைத்து டி20 உலகக் கோப்பை அணிகளிலும் இடம்பிடித்த ஒரே வீரர் என்கிற பெருமையை பிரபல இந்திய வீரர் ரோஹித் சர்மா தன்வசப்படுத்தியுள்ளார். 

வருகின்ற அக்டோபர் மாதம் 16 முதல் நவம்பர் மாதம் 13 வரை டி20 உலகக் கோப்பைப் தொடர் நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்தோய அணியில் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மேலும், பும்ரா, ஹர்ஷல் படேல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். மாற்று வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சஹார் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள்.

ரோஹித் சர்மா 2022 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றதன் மூலம், 2007, 2009, 2010, 2012, 2014, 2016, 2021, 2022 என அனைத்து டி20 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான இந்திய அணிகளிலும், ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சர்வதேச டி20  கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ரோஹித் சர்மா, தற்போது இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் களமிறங்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup all series one Indian player


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->