திருமணத்திற்கு முன் தந்தையாகிய பிரபல கிரிக்கெட் வீரர்.! - Seithipunal
Seithipunal


இப்போதெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்ள திருமணம் என்ற ஒரு விஷயம் அனாவசியமாக போய்விட்டது. திரைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் பலரும் திருமணத்திற்கு முன்பே குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். திருமணத்தின் போது குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ் பலரும் தாய், தந்தையின் திருமண புகைப்படத்தை பார்த்துவிட்டு நான் எங்கே காணும் என்று கேட்பார்கள். அந்த ஏக்கம் இப்போது வரும் குழந்தைகளுக்கு இருக்க வேண்டாம் என நினைக்கும் தலைமுறை குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் திருமணம் செய்து கொள்கின்றனர். 

அந்த வகையில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஸ்டுவர்ட் பிராட் தனது திருமணத்திற்கு முன் தந்தையாகி இருக்கிறார். அவருடைய வருங்கால மனைவியான மோலி கிங் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். 

தனது மகளின் புகைப்படத்தை ஸ்டூவர்ட் பிராட்டின் காதலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த குழந்தைக்கு அன்னாபெல்லா பிராட் என்று பெயரிடப்பட்டு இருக்கின்றது. பல வருடங்களாக பிராட் மற்றும் மோலி இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். கடந்த வருடத்தில் தான் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stuart broad daughter photo viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->