#INDvsSA : தென் ஆப்பிரிக்கா அணி பொறுப்பான ஆட்டம்..  இந்திய அணிக்கு 279 ரன்கள் இலக்கு.! - Seithipunal
Seithipunal


இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 279 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்ரிக்கா அணி .

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்று கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-தென்னாபிரிக்கா மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 278 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 74 ரன்களும், எய்டன் மாய்க்ரம் 79  ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய செய்ய முகமது சிராஜ் 3 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, குல்தீப் யாதவ், ஷர்தூல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதனைத்தொடர்ந்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும் அதனால் இந்திய அணி வெற்றி பெற தீவிரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Africa target of India 279 runs 2nd ODI


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->