#T20Worldcup : இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்.! - Seithipunal
Seithipunal


டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை  எதிர்கொள்கிறது. அந்த வகையில், டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று மதியம் 1.30 மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் வந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இதுவரை பாகிஸ்தான் அணி 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய முக்கிய 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது. இதில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் ஆர் ஜே பாலாஜி ஆகியோர் கிரிக்கெட் வர்ணனையாளராக பேசி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan commentary in Star sports Tamil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->