யார் இந்த சிசண்டா மகளா?! அசத்தலான திறமைகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் ஆல் ரவுண்டர்!
Sisanda Magala has been picked as Kyle Jamieson's replacement at the CSK.
நடப்பு ஐபிஎல் சீசன் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய வரவாக சிசண்டா மகளா என்ற வீரர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் கையில் ஜெமிசன் காயம் காரணமாக இந்த வருடம் ஐபில் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக மாற்றுவீரர் யார் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த நிலையில் அவருக்கு மாற்றுவீரராக தென்னாபிரிக்க நாட்டைச் சார்ந்த சிசன்டா மகளா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
32 வயதான சிசண்டா மகளா தென் ஆப்பிரிக்காவில் உள்நாட்டு போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்காக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாட தேர்வு செய்யப்பட்டாலும் உடற்தகுதி காரணமாக அவர் சேர்க்கப்படவில்லை.

உள்நாட்டு தொடரில் மிக சிறந்த வீரராக விளையாடி வரும் அவர், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இறுதி கெட்டப் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசும் திறன் படைத்த இவர், துல்லியமான யார்க்கர் வீசுவதிலும் வல்லவர் அதில் புகழ்பெற்றவர் எனவும் கூறப்படுகிறது.
அதேபோல இறுதி நேரங்களில் அதிரடியாக பேட்டிங் ஆடக்கூடிய திறமையை பெற்றிருப்பதால் இவர் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலிக்கிறார், இவருடைய திறமையானது தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கு கண்ணில் பட்டு தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
English Summary
Sisanda Magala has been picked as Kyle Jamieson's replacement at the CSK.