டெங்குவால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு! அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த உலக கோப்பை தொடர்கான முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. 

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே இந்திய அணி சென்னை வந்து இறங்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹூக்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து காணப்படும் சூழலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக 5வது இடத்தில் களம் இறங்கும் விக்கெட் கீப்பரான இஷான் கிஷன் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கில் டெங்கு காய்ச்சலில் குணமடைய அதிகபட்சம் 7 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் வரும் அக்டோபர் 12ஆம் தேதி அகமதாபாத்தில் நெதர்லாந்துக்கு எதிராக நடைபெறும் 2வது போட்டியிலும் கில் பங்கேற்பது சந்தேகம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கம் முதல் கில் விளையாடிய 20 போட்டிகளில் 1,230 ரகளை குவித்துள்ளார். இதன் மூலம் அவர் ஒரு போட்டிக்கு 73 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shubman Gill contracted dengue in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->