பும்ராவின் மரண பந்துவீச்சு! இந்தியா வெற்றி பெற எளிய இலக்கு! - Seithipunal
Seithipunal


இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய, முதல் இன்னிங்ஸ் சிராஜ் பந்துவீச்சில் சிக்கி 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கி ரன்குவிப்பில் ஈடுபடும், இன்னிங்கிஸ் வெற்றிக்கான இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் பரிசாக கிடைத்தது.

இந்திய அணியில் விராட் கோலி 46 ரன்னும், ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். மற்ற 7 வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி தனது 2-வது இன்னிங்சை ஆட தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில், தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென் ஆப்ரிக்க வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

மறுமுனையில் மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டாக, இறுதியில், தென் ஆப்பிரிக்கா தனது 2வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட் எடுத்து அசத்தினார்.

இதன் மூலம் இந்திய அணிக்கு 79 ரன்கள் என்று எளிய வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SAvsIND 2nd Mohammed Siraj Jasprit Bumrah 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->