1000 -வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி , சச்சின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆயிரமாவது போட்டியில் விளையாட உள்ள இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1974 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. அஜித் வடேகர் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தற்போது மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

நாளை ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் இந்திய அணி புதிய வரலாறு படைக்க உள்ளது. இந்த போட்டி இந்திய அணி இந்திய அணிக்கு 1000 -வது ஒருநாள் போட்டி ஆகும். ஆயிரம் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் 1000-மாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய மைல்கல் என்று தெரிவித்துள்ளார். 1974 ஆம் ஆண்டு, முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்ற நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் உள்ளிட்டவர்களால் தான் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.

நமது இந்திய அணியின் முந்தைய தலைமுறை ரசிகர்களையும், தற்போதைய தலைமுறை ரசிகர்களையும் நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒட்டு மொத்த தேசமும் பெருமை பட வேண்டிய நேரம் இது என்றும், இன்னும் சிறப்பாக இந்திய கிரிக்கெட் வளரும் என நம்புவதாகவும், 1000-வது போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களையும் வாழ்த்துவதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 999 ஒருநாள் போட்டிகளில் 518 போட்டிகளில் வெற்றியும் 431 போட்டிகளில் தோல்வி கண்டுள்ள இந்தியா 9 போட்டிகளை டை செய்தது. 41 போட்டிகளுக்கு முடிவு கிடைக்காமல் போயிருக்கிறது. இதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி 958 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி 936 போட்டிகளிலும் பங்கேற்று அடுத்தடுத்த இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin Tendulkar wishes team India


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->