ரிஷப் பந்த்க்கு தொடர் சிகிச்சை! கவலையில் குடும்பத்தினர்!  - Seithipunal
Seithipunal


விபத்தில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.  அதே சமயம் அவருக்கு போதுமான ஓய்வும் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ரிஷப் பந்த் 3 நாட்களுக்கு முன்பு காலை டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் தனியாக காரில் பயணித்த போது, குழியில் விட்டுவிடாமல் வாகனத்தை இயக்க முற்பட்டதில், சாலை நடுவே இருந்த தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவருக்கு உயர்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அவருக்கு போதுமான ஓய்வு கிடைக்கவில்லை என குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். 

போதுமான ஓய்வு கிடைக்காததால், பரிந்துரைக்கப்பட்ட வருகை நேரத்தைப் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் அவரைச் சந்திக்க வருவது குறித்து ரிஷப் பந்தின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். அன்பின் மிகுதியால், அக்கறையின் பேரில் நலம் விசாரிக்க அதிக நபர்கள் வருவதால் போதுமான ஓய்வு கிடைக்கவில்லை என குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதே கருத்தையே ரிஷப் பந்தின் சிகிச்சையை கவனித்து வரும் மருத்துவக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். "அதிகமானவர்கள் பார்க்க வருவதால் பந்த் ஓய்வெடுக்க போதிய நேரம் இல்லை. மக்கள் இப்போதைக்கு அதைத் தவிர்க்க வேண்டும், அவர் உடல் மற்றும் மன ஓய்வு பெறுவது முக்கியம்" என தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rishabh Pant's family feel bad for not getting sufficient time to rest


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->