உலகக்கோப்பைக்கான இந்திய அணி! உடனடியாக அழைக்கப்பட்ட இருவர்! டாப் ஆர்டரில் அதிரடி மாற்றம்!  - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வருகிற 23-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கு தேர்வு செய்யப்படாத வீரர்களை கொண்ட இந்திய ஏ அணியில் ரிஷப் பண்ட், அஜின்கியா ரஹானே இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2018 பிப்ரவரி வரை மாற்று தொடக்க ஆட்டக்காரராக ரஹானே இருந்த நிலையில் ராகுல் அந்த இடத்தினை தட்டி பறித்தார். அதற்குப் பிறகு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். டெஸ்ட் அரங்கில் கலக்கிவரும் ரிஷப் பாண்ட்  இன்னும் ஒருநாள் போட்டியில் தனது இடத்தை பிடிக்காமல் இருக்கிறார். இந்த  நிலையில் உலக கோப்பைக்கான இந்திய அணியை தயார் செய்யும் விதமாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய ஏ அணி விளையாடும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ரிஷப் பாண்ட், ரஹானே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் இருவரையும் இந்த தொடரில் டாப் ஆர்டரில் விளையாட வைக்க வேண்டும் எனவும் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆடி வரும் நிலையில் மாற்று தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் இருக்கிறார்.  ஆனால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை தவறாக பேசியதாக சர்ச்சை உண்டாக ராகுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அணிக்கு மாற்று தொடக்க ஆட்டக்காரர் தேவைப்படும் நிலையில் அந்த இடத்தை நிரப்புவதற்காக ரஹானே, பாண்ட் அணியில் இடம்பெறும் வகையில் ஏ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.  ராகுல் சஸ்பெண்ட் நீக்கம் இல்லை என்றால் அந்த இடத்தில் ரஹானே இடம்பெறவும், ஆஸி தொடரில் தவான் சொதப்பியதால் மாற்று இடது கை ஆட்டக்காரர் தேவைப்படும் என்பதால் அதற்கு வசதியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதற்கு பாண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியா அணியில் விளையாடுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை அவரும் இடம்பெறாத பட்சத்தில் இந்திய அணியை பேலன்ஸ் செய்வதற்காக மாற்று வீரர்களை தயார் செய்வதில் கிரிக்கெட் வாரியம் மும்முரமாக இறங்கியுள்ளது. ஒருவேளை பாண்ட் டாப்  ஆர்டரில் இறங்கினால் எதிரணி பவுலர்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆட்டக்காரராக இருப்பார் என்பதில் சந்தேகம் வேண்டாம். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rishabh Pant ajinkiya rahane will add world cup squad


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal