ராயுடுவை சுத்துப்போட்ட விவசாயிகள்! அடுத்து நடந்தது என்ன? தெறிக்கவிடும் ஆந்திர அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரும், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவருமான அம்பத்தி ராயுடு, கடந்த ஐபிஎல் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

ஹைதராபாத்தை சேர்ந்த அம்பத்தி ராயுடு, ஆந்திர மாநிலத்தின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தல் களத்தில் இறங்க உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், நேற்று ஆந்திரா மாநில முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க, அமராவதிக்கு அம்பத்தி ராயுடு சென்றுள்ளார்.

அப்போது ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியே இருக்க வேண்டும் என்று, அந்நகரத்திற்கு நிலம் வழங்கிய விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அம்பத்தி ராயுடுவின் கார் வருவதைக் கண்டு போராட்டக்காரர்கள் அவரின் காரை வழிமறித்து, அவரை கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினர்.

போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று கீழே இறங்கி வந்த அம்பத்தி ராயுடுவிடம், நீங்கள் போராட்ட மேடைக்கு வர வேண்டும் என்ற அழைப்புவிடுத்தனர்.

அதற்கு அம்பத்திராயிடு புன்னகையுடன் 'என்னால் முடியாது' என்று மறுப்பு தெரிவித்தார். 

தொடர்ந்து போராட்டக்காரர்கள், 'அமராவதி தான் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக இருக்க வேண்டும்' என்று உங்களின் ஆதரவை இங்கேயே தெரிவியுங்கள், 'ஜெய் அமராவதி' என்று முழுக்கமிடுங்கள் என்று போராட்டக்காரர்கள் வற்புறுத்தினர்.

ஆனால் இதற்கும் அம்பத்தி ராயுடு மறுப்பு தெரிவித்தார். மேலும், அம்பத்தி ராயுடு போராட்டக்காரர்களிடம் 'நிச்சயமாக அமராவதி தான் ஆந்திராவின் நிரந்தர தலைநகரமாக இருக்கும்' என்று கூறிவிட்டு, தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார் .
அம்பத்தி ராயுடு மறுப்பு தெரிவித்த போது போராட்டக்காரர்கள் அவரை கண்டிருக்கும் படியோ, அவமரியாதை செய்யும்படியோ நடந்துகொள்ளவில்லை. 

அம்பத்தி ராயுடுவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, போராட்டக்காரர்களை கையாண்ட விதமும் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும், அம்பத்தி ராயுடு இப்போதே ஒரு அரசியல்வாதிக்கு உண்டான அனைத்து தகுதியும் பெற்றுவிட்டார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rayudu In Politics


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->