#INDvsAUS : DAY 1..வலுவான நிலையில் இந்திய அணி.. நைட் வாட்ஜ் மேனாக களமிறங்கிய அஸ்வின்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ( பிப்ரவரி 9 - 13) நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுக வீரர்களாக டெஸ்ட் போட்டியில் களமிறங்குகின்றனர். அதன்படி, சூரிய குமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் ஆகியோர் களமிறங்கினர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி 63.5 ஓவர்களில் 10 விளையாட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும், ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி  முதல் நாள் ஆட்டநேரம் முடிய 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், கேஎல் ராகுல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து நைட் வாட்ஜ் மேனாக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 5 பந்துகளை சந்தித்த நிலையில், ரன்கள் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளார்.

இறுதியாக இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 56 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் ரன்கள் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravichandran Ashwin part time night watchman against australia


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->