நல்லா விளையாடினா போதாது தம்பி, ஒழுக்கமா நடந்துக்கணும், இந்திய வீரரை வெளியில் விரட்டிய துயர சம்பவம்! யார் அந்த வீரர்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோவை ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மைதானத்தில் நடைபெற்ற துலீப் டிராபி இறுதிப் போட்டியில், தெற்கு மண்டலத்தை வீழ்த்தி மேற்கு மண்டல அணி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மேற்கு மண்டல மணி 270 ரன்களையும் தெற்கு மண்டல மணி 327 ரன்களையும் எடுத்திருந்தது.

57 ரன்கள் பின்தங்கிய மேற்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் 265 ரன்கள் அபாரமான ஆட்டத்தின் காரணமாக 585 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. மிக அபாரமாக விளையாடி மிகப்பெரிய பங்களிப்பை அளித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். 

பின்னர் ஆடிய தெற்கு மண்டல மணி 234 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 294 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தின் இடையே சிறப்பாக விளையாடியதற்காக பரபரப்பாக பேசப்பட்ட  ஜெயஸ்வால் மற்றொரு விஷயத்துக்காகவும் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறார். தெற்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, தோல்வியை தவிர்க்க முடியவில்லை என்றாலும், போராடிக் கொண்டிருந்தார் ரவிதேஜா. 

 

ரவிதேஜா களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவரிடம் சில்லி பாயிண்டில் பீல்டிங் நின்று கொண்டிருந்த ஜெய்ஸ்வால் வம்பு இழுத்துக் கொண்டே இருந்தார். முதலில் நடுவரால் எச்சரிக்கை செய்யப்பட்ட அவர், பின்னர் தொடர்ந்து தனது கேலி கிண்டல்களை செய்து கொண்டே இருந்தார்.

ரவிதேஜாவையும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலையும் சமாதானப்படுத்துவதே வேலையாக இருந்தார் மேற்கு மண்டல அணி கேப்டன் அஜின்கியா ரஹானே. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நடுவர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இரண்டு மூன்று தடவை எச்சரித்தனர்.

இதனை கவனித்த கேப்டன் அஜின்கியா ரஹானே விபரீதம் ஆகிவிடக்கூடாது என கருதி, நல்லா விளையாடினால் மட்டும் போதாது தம்பி,  ஒழுங்கினமும் வேண்டும் என்று சொல்வது போல களத்திற்கு வெளியே செல் என்று அவரை விரட்டி விட்டார். பின்னர் அவருக்கு மாற்று வீரர் வந்து களவீரராக செயல்பட்டு கொண்டிருந்தார்.

தவறை உணர்ந்து ஜெயிஸ்வால் தலைகுனிந்த வாரே பெவிலியன் நோக்கி திரும்பினார். பின்னர் ஆட்டம் முடியும் தருவாயில் மீண்டும் ஜெயிஸ்வாலை  உள்ளே அழைத்த ரகானே, களத்தில் களவீரராக செயல்பட அனுமதித்தார். இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே சமயம் 265 ரன்கள் என்று இமாலய ரன்களை குவித்தும்,  தனது ஒழுங்கீனமான நடவடிக்கையால் அவப்பெயரை சம்பாதித்து இருக்கிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahane asked Jaiswal to leave the field after few discipline issues in duleep trophy final


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->