நேற்றைய போட்டியில் டி காக் செய்த செயல்.. மனுஷன் வேற லெவல் தான்.. வியப்பில் நடுவர்கள் மற்றும் எதிரணி வீரர்கள்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15 வது சீசனில் 42வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இது எடுத்து லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல்  6 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் தீபக் ஹூடாவும் சிறப்பாக ஆடினார். 

டி காக் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 46 ரன்களில் அவுட் ஆனார். தீபக் ஹூடா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா, ஸ்டோய்னிஸ், ஆயுஷ் படோனி மற்றும் ஜேசன் ஹோல்டர் யாரும் சரியாக ஆடவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 153 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், லக்னோ இன்னிங்சின் போது சுவாரஸ்யமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆட்டத்தின் 13 வரை சந்தீப் ஷர்மா வீசினார். குயிண்டன் டி காக் ஸ்ட்ரைக்கில் இருந்தார். 4-வது பந்தை  டி காக் அடித்த பந்து எட்ஜாகி கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவின் கையில் சென்றது. உடனே பவுலர் மற்றும் கீப்பர் மிகவும் உறுதியாக அவுட் என கூறினர். அதை ஏற்காத நடுவர் நாட் அவுட் என்ற முடிவை கொடுத்தார். 

எனினும் தான் அவுட் என்பதை அறிந்த குயிண்டன் டி காக் நியாயமாக நடந்து கொள்ளும் வகையில் திடீரென களத்திலிருந்து வெளியேறினார். இதனை கண்ட நடுவர் மட்டுமன்றி எதிரணி வீரர்கள் வியப்படைந்தனர். நடுவர் அவுட் கொடுப்பதற்கு முன்பாகவே தானாக அவுட் என கூறி வெளியேறியதால் குயிண்டன் டி காக்கை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Quinton De Kock Out issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->