வீடியோ! 6 பந்துகளில் 6 சிக்ஸர், ஹாட்ரிக் விக்கெட்... மறக்க முடியாத போட்டியாக மாற்றிய பொல்லார்ட்!  - Seithipunal
Seithipunal


மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு யாரும் பெரிதாக பங்களிப்பு அளிக்காத நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அற்புதமான தொடக்கத்தை கொடுக்க, சிம்மன்ஸ் 26 இவென் லூயிஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.

நான்காவது ஓவரில் லூயிஸ் ஆட்டமிழந்த அடுத்தடுத்த பந்துகளில் அந்த அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்கள். இந்த 3 விக்கெட்டுகளையும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செயா ஹாட்ரிக் விக்கெட் ஆக வீழ்த்தி அசத்தினார் ஆனால் அவருடைய கொண்டாட்டம் நீண்ட நேரம் நினைக்கவில்லை. ஆறாவது ஓவரை வீச வந்த அகில தனஞ்சயாவுக்கு, மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் மறக்க முடியாத ஒரு பொல்லாத ஆட்டத்தை ஆடி அதிர்ச்சி அளித்தார். அந்த ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை  பெற்றார். 

இதற்கு முன்னதாக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆக இருந்த யுவராஜ் சிங் கடந்த ௨௦௦௭ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் விளாசியது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் 6 பந்துகளையும் சிக்சர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக 2007ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்க அணியின் வீரர் கிப்ஸ 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி இருந்தார். பொல்லார்ட்டின் அதிரடியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 13 ஆவது ஓவரிலேயே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pollard hit 6 sixes in six balls of over


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->