130 கிலோ எடை கொண்ட, 22 வயதான வீரரை நேரடியாக சர்வதேச போட்டிக்கு அழைத்த பாகிஸ்தான் அணி!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 22 வயதேயான அறிமுக வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தேர்வு செய்யப்பட்டதில் ஆச்சரியம் என்னவென்றால், பாகிஸ்தான் அணிக்காக ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட் போட்டியில் மட்டுமே அவர் ஆடி இருக்கிறார் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 

இவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? யார் இவர்? என்று பார்த்தால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான மொயின்கானின் மகன்தான் இந்த 22 வயதான அசாம் கான் என்பது தெரியவந்துள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அங்கு சென்று ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. 

இந்த இரு தொடர்களுக்குமான பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த இரு தொடர்களிலும் 20 போட்டிக்கான அணியில் 22 வயதான அசம்கான் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒரே ஒரு முதல் தரப்போட்டியில் விளையாடி இருக்கிறார் என்றாலும் உள்ளூர் கிரிக்கெட் லீக் மற்றும் 20 ஓவர் லீக்கில் 36  போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இவருடைய சிக்ஸர் அடிக்கும் திறன் தான் தேர்வாளர்களை வெகுவாக கவர்ந்தது. இவரை ஓர் ஆண்டுக்கு முன்பாகவே அணியில் தேர்வு செய்வது குறித்து கலந்து ஆலோசித்த போது, அதற்கு அவருடைய உடல் எடையானது தடையாக இருந்திருக்கிறது. அவர் சுமார் 130 கிலோ எடையுடன் இருந்ததால் அவர் எடை குறைத்தால் அணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் 100 கிலோவாக குறைத்துள்ளார். இதையடுத்து அவர் தற்போது அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Team maiden call up 22 years Azam Khan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->