ஆள விடுங்க சாமி., பாகிஸ்தானில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்த நியூசிலாந்து அணி.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிடபட்டது. இதற்காக பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து அணி வந்தது. 

சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடர் இரு நாட்டு ரசிகர்க்கில்டயே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது.

ஒருநாள் ஆட்டங்கள் பாகிஸ்தானின் ராவல்பிண்டியிலும் டி20 தொடர் லாகூரிலும் நடைபெறவிருந்தன. இதில் இன்று முதல் ஒருநாள் ஆட்டம் நடைபெற இருந்தது.

ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்தது. 

பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில், "உச்சக்கட்ட பாதுகாப்பை இங்கு கிரிக்கெட் விளையாட வரும் அணிகளுக்கு வழங்கி வருகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் அத்தகைய பாதுகாப்பை உறுதி செய்தோம். 

மேலும், பாதுகாப்பு குறித்து நியூசிலாந்து பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் பிரதமர் பேசினார். ஆனால், கடைசி நேரத்தில் நியூசிலாந்து அணி விலகி இருப்பது எங்களுக்கும், சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அளித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pak vs nz match cancel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->