தொடங்கியது இரண்டாவது போட்டி! வில்லியம்சன் எடுத்த ஆச்சரியமான முடிவால் கோலி மகிழ்ச்சி!  - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரின் இரண்டாவது போட்டி ஆனது இன்று நியூசிலாந்தின் ஆக்லாந்து கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன்  முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார் 

5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஆனது கடந்த 24ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 203 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 204 ரன்களை வெற்றி கரமாக சேஸ் செய்து அந்த போட்டியில் வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

ஏனெனில் இந்திய அணியானது சேஸிங்கில் மிக சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அதேபோல இரண்டாவதாக பேட்டிங் செய்ய பனியும் சாதகமாக இருக்கும்போது நியூசிலாந்து அணியின் கேப்டன் 
எடுத்த முடிவானது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீசவே விரும்புவதாகவே தெரிவித்துள்ளார். அணிகளை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் விளையாடிய இரண்டு அணிகளும் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே அணியை மீண்டும் களம் இறங்கியுள்ளது. 

இந்தியா (விளையாடும் லெவன்): ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாகூர், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா

நியூசிலாந்து (விளையாடும் லெவன்): மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன், கொலின் டி கிராண்ட்ஹோம், ரோஸ் டெய்லர், டிம் சீஃபர்ட், மிட்செல் சாண்ட்னர், பிளேர் டிக்னர், டிம் சவுதி, இஷ் சோதி, ஹமிஷ் பென்னட்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NZ won the toss elected bat first


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->