நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 95 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெறும் 95 ரன்களில் ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளித்து தாக்கு பிடிக்க முடியாமல் தனது விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் மேட் ஹென்ரியின் பந்துவீச்சில் ரன்கள் எடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறிய தென் ஆப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்சில் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக பந்து வீசிய மேட் ஹென்ரி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி, 3 விக்கெட் இழந்து 116 ரன்கள் எடுத்துள்ளது.ஹெண்ட்ரி நிக்கோல்ஸ் 37 ரன்களுடனும் ,நெய்ல் வாக்னர் 2 ரன்களுடனும் களத்தில்  உள்ளனர். நியூசிலாந்து அணி தத்போது வரை 21 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Zealand south Africa Test cricket match


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->