இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு செய்வதில் புதிய கட்டுப்பாடு..!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடர், டி20 உலக கோப்பை தொடர் மற்றும் வங்கதேசத்துடன் ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி ரசிகர்கள்பெரும் ஏமாற்றம் அடைந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அணி தேர்வு செய்யும் முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் ராஞ்சி கோப்பை, துலீப் கோப்பை உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் விளையாடி இருக்க வேண்டும்.

இந்திய அணிக்கு தேர்வாகும் வீரர்கள் கட்டாயம் யோ-யோ, டெக்சா பயிற்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களின் விளையாட்டை பிசிசிஐ அதிகாரிகள் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New restrictions on selection of Indian cricket team players


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->