தேசியக்கொடியில் ஆட்டோகிராஃப்! நோ சொல்லிய நீரஜ் சோப்ரா - குவியும் பாராட்டு! - Seithipunal
Seithipunal


உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில், நம் தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் கேட்ட ரசிகைக்கு மறுப்பு தெரிவித்த நீரஜ் சோப்ராவின் செயல் இந்திய மக்களை நெகிழச் செய்துள்ளது.

ஹங்கேரியில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். 

உலக தடகள சாம்பியன்ஷ்ப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய  வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

போட்டி முடிந்து ஹங்கேரி நாட்டு ரசிகை ஒருவர் நீர்ஜ் சோப்ராவிடம், நம் இந்திய தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் வேண்டும் என்று கேட்டுள்ளார். 

அப்போது, தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட மறுத்த நீரஜ் சோப்ரா, அந்த ரசிகையின் டிஷர்ட்டில் கையெழுத்திடார்.

இதுகுறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகவே, நீரஜ் சோப்ராவின் தேசப்பற்றை எண்ணி நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்த சமூகவலைத்தள பதிவு ஒன்று, "தனது செயல்களின் மூலம் களத்தின் உள்ளேயும், வெளியேயும் இதயங்களை நீரஜ் சோப்ரா வென்றுவிட்டார்" என்ற பதிவும் வைரலாகி வருகிறது.

மேலும் சில பாராட்டு பதிவுகள் : தேசியக் கொடி மீதான அவரின் மதிப்பும் மரியாதையும் போற்றுதலுக்குரியது.

ஒலிம்பிக் போட்டியின்போது கூட தேசியக் கொடியை எப்படி முறையாக மடிக்க வேண்டும் என்று நீரஜ் கூறியிருந்தார்.

நீரஜ் ஒரு இந்திய ராணுவ வீரர் என்று சொல்லுவேன். அவர் ஒரு போதும் தவறான முன்மாதிரியாக இருக்கமாட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neeraj Chopra sign National Flag


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->