அடுத்த உலகக் கோப்பை அணியில் தோனி.. பயிற்சியாளர் அதிரடி.! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை தொடருடன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இது குறித்து தோனி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. 

தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும் அடுத்து வரும் தொடர்களில் அவர் மற்ற வீரர்களை போலவே 11 பேரில் ஒருவராக இல்லாமல், 15 பேரில் ஒருவராக இருப்பார் என்று ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன. தோனி ஓய்வு பெறாமல் வரும் தொடர்களில் இருந்தால் அவரை விக்கெட் கீப்பராக இறக்கமாட்டார்கள். 

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட்க்கு  வாய்ப்பு அளிக்கப்படும்.  தோனி வெளியிலிருந்து ஆலோசனை வழங்குவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி, தோனி ஓய்வு பெறுவதை அவரின் பெற்றோர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தோனி ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று அவரின் பெற்றோர்கள் என்னிடம் கூறினார்கள் என தெரிவித்தார். 

மேலும் தோனி அடுத்து வரும் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MS dhoni coach says dhoni retirement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal