ஐந்து வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் மைதானத்தில் தோன்ற போகும் தோனி!  - Seithipunal
Seithipunal


இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியானது நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்குகிறது.

ஏற்கனவே தொடரினை 2 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று விட்ட நிலையில், இந்த போட்டி சம்பிரதாய போட்டியாகவே அமையும். இருப்பினும் இந்த போட்டியை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். இந்த போட்டியை காண சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது. 

இந்த போட்டி நடைபெறும்  ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி தான் தோனியின் சொந்த ஊராகும். அவரை கவுரவப்படுத்தும் விதமாக இந்த போட்டியின் தொடக்க நாளான நாளை அவரது குடும்பத்தினருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் குழந்தை, பள்ளி கால பயிற்சியாளர்களுக்கும் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுதது இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அழைப்பை ஏற்று தோனியும் அவருடைய நண்பரும் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் நாளைய போட்டியில் தொடக்கத்தின் போது கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒய்வு பெற்ற பிறகு தோனி டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நாளை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MS Dhoni attend Ranchi Test as Special Guest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->