அவமானம் தாங்காமல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எடுத்த முடிவு..? வெளியான பகீர் கடிதம்.! - Seithipunal
Seithipunal


மேற்கு இந்திய தீவுகளில் நடந்த மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதி போட்டியில்  இங்கிலாந்திடம் தோற்றது.

லீக்’ போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய மகளிர் அணி அரை இறுதியில் மோசமாக ஆடியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. இப்படிப்பட்ட மிகவும் முக்கியமான ஆட்டத்தில் இருந்து முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் நீக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

2 அரை சதம் அடித்த பிறகு அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அப்படி இருந்தும் அவர் அரைஇறுதியில் சேர்க்கப்படாதது பூதாகரமானது. இதனிடையே,  மிதாலிராஜ் பயிற்சியாளர், ஹர்மன்பிரித் கவூரை கடுமையாக சாடினார். கவூர் சூழ்ச்சியாக செயல்படுகிறார் என்றும்,  கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு விசாரணை நடந்த முடிவு செய்துள்ளது.

இதுபற்றி விளக்கம் அளிக்க கேப்டன் பிரீத்கவூர், மிதாலிராஜ், பயிற்சியாளர் ரமேஷ்பவார், மானேஜர் திருப்தி பட்டாச்சார்யா ஆகியோருக்கு சம்மன் அனுப்ப இருக்கிறது. அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து மிதாலி ராஜ் பி.சி.சி.ஐக்கு எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ' எனது இருபது ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் இப்போது தான் முதல்முதலாக மன சோர்வடைந்துள்ளேன். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சிலர் என்னை அடக்க பார்க்கின்றனர். என் நம்பிக்கையை உடைக்க பார்க்கின்றனர். என்னையே ஒரு முறை சுயமதிப்பீடு செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

நான் கேப்டன் ஹர்மன்ப்ரீத்க்கு எதிராக இல்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். என்னை  அணியில் இருந்து விடுவிக்கும் பயிற்சியாளரின் முடிவுக்கு ஹர்மன் பிரீத் கவுர் ஆதரவு தெரிவித்ததை மட்டுமே எதிர்த்தேன்.

அதனை தவிர வேறு எதையும் நான் செய்யவில்லை. நாட்டுக்காக உலகக் கோப்பையை வென்றுகொடுக்கவேண்டும் என எண்ணினேன்.

ஆனால் ஒரு சிறப்பான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம். இந்த அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நொறுங்கிப்போயுள்ளேன்' என்று அந்த கடிதத்தில் மனம் உருகி கூறியுள்ளார்..

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mithali Raj Says Coach Ramesh Powar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->