இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எப்போதும் கடினம்- மிட்செல் மார்ஷ்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக மேக்ஸ்வெல், ஆடம் சம்பா, ஸ்டோய்னிஸ் மற்றும் மிட்சல் மார்ச் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பேசியதாவது, எங்கள் எங்கள் அணியை பொறுத்தவரை பல ஆல்ரவுண்டர்களுடன் சிறப்பாக உள்ளது. இந்த தொடரில் அதிக ரன்கள் அடிப்படும் என நான் நினைக்கிறேன். 

இந்தியாவில் விளையாடப்படும் போட்டிகளில் எல்லாம் அதிக ரன்கள் அடிக்கிறார்கள் என்றெல்லாம் இல்லை சிறப்பாக விளையாடுகிறார்கள். உலக கோப்பை இங்குதான் நடைபெறுகிறது. அதனால் இந்த தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். எங்களுடைய முழு கவனமும் இந்த தொடரை எப்படி வெல்வது என்ற எண்ணத்தில் தான் உள்ளது. 

ஒரு நாள் உலகக் கோப்பைக்கு இன்னும் 6 மாதங்கள் தான் உள்ளது அதனால் எங்களுடைய அணியை கட்டவைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த தொடரில் சில சோதனை முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளோம்‌ எங்களுடைய அணி வீரர்கள் பலருக்கும் இந்தியாவில் விளையாடிய அனுபவம் இருக்கிறது அது நிச்சயம் கை கொடுக்கும்.

ஆனால் இந்தியாவில் ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெறுவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். அவர்கள் தொடர்ந்து நன்றாக விளையாடி வருகின்றனர். 

ஆனாலும் எங்களுடைய அணியிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். அதனால் இந்த தொடர் நிச்சயம் கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். தற்போது தான் அறுவை சிகிச்சை முடிந்து விளையாட வந்திருக்கிறேன். அதனால் இந்த தொடரில் வெறும் பந்துவீச்சாளராக தான் செயல்படுவேன். மேலும் ஐபிஎல் தொடரிலும் பந்து வீச முடிவு செய்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mitchell Marsh speech about ODI series against India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->