ஐபிஎல் போட்டி நடத்த தடை?! ரசிகர்கள் ஏமாற்றம்!! உயர்நீதிமன்றம் சென்ற வழக்கறிஞர்!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 

சீனாவை மையமாக கொண்டு உருவான கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள், மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என செய்தியாளரிடம் கங்குலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஐபிஎல் போட்டிக்கோ, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கோ எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்று பதிலளித்திருந்தார்.

இதேபோலவே ஐபிஎல் நிர்வாக கவுன்சில் தலைவர் பிரிஜேஷ் படேலும், ஐபிஎல் போட்டிகள் ரத்தாகாது என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சைகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மார்ச் 29-ம் தேதி தொடங்கி மே 4-ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளன. இந்தப் போட்டிகளைக் காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் கூடுவார்கள் என்பதால், இந்தப் போட்டிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may chance to banning IPL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->