என்னயா வெளியில் அனுப்புனீங்க, ஹாட்ரீக் விக்கெட் எடுத்து பதிலடி கொடுத்த குல்தீப் யாதவ்!   - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நியூசிலாந்து ஏ அணி, இந்திய ஏ அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடரானது சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. 

அந்த அணியில் மிகச் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திர 61 ரன்கள், ஜோ கார்ட்டர் 72 ரன்கள் எடுக்க,  47ஓவர்களில் 219 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய ஏ அணி தரப்பில் மிக சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுடன் 4 விக்கெட்டுகளையும் ,  ரிஷிதவான், ராகுல் சஹர் தலா 2 விக்கட்டுகளையும், ராஜ் பவா, உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்கள். 

பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. ருத்ராஜ் கெய்க்வாட் 34 பந்துகளில் நான்கு பவுண்டரி ஒரு பிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஜாட் பட்டிதர் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் உடன் 20 எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சனும் 35 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த ப்ரீத்வி ஷா 48 பந்துகளில் 11 பௌண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் விளாசி 77 ரன்களில் ஆட்டம் இழந்தார். இறுதியில் நிதானமாக ஆடிய தவான் 43 பந்துகளில் 22 ரன்கள்டனும், ஷார்துல் தாக்கூர் 24 பந்துகளில் மூன்று பவுண்டரி ஒரு சிக்சர் உடன் 25 ரன்களையும் அடித்து, 34 ஓவர்களிலேயே 222 ரன்களை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தனர். 

இந்த போட்டியில் இந்திய சுழற்பந்து வேச்சாளர் குல்திப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் முன்னதாகவே சோலியா விக்கெட்டை வீழ்த்தி இருந்த நிலையில், 47வது ஓவரை வீசிய பொழுது, 47 வது ஓவரின் நான்காவது பந்தில் வான் பிகையும், ஐந்தாவது பந்தில் ஜோ வால்கரையும், ஆறாவது பந்தில் செக்கப் தபியையும் அடுத்தடுத்து விக்கெட் எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kuldeep yadav took hat trick wicket against NZA in Chepauk at Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->