முதல் இந்திய வீரர்.. ஐபிஎல் வரலாற்றில் புதிய சரித்திரத்தை படைத்த கே எல் ராகுல்.!! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல்.14-வது சீசனில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்ச முடிவு செய்தார்.

அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய எவின் லீவிஸ் 21 பந்திற்கு 36 ரன்களை எடுத்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி அரைசதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 49 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார், லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மஹிபால் லாம்லோர் 17 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, 20 ஓவர் முடிவில் 185 ரன்கள் எடுத்தது. 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல், மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடினார். இந்த இரண்டு ஜோடிகளும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை நான்குபுறமும்  சிதறடித்தனர். கே எல் ராகுல் 49 ரன்களும், மாயன்க் அகர்வால் 67 ரன்களும் எடுத்து வெளியேறினார்.

இதையடுத்து நிக்கோலஸ் பூரணும் சிறப்பாக விளையாடினர். இதன்மூலம் கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அசத்தலாக விளையாடிய பஞ்சாப் அணியால் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க முடியாதா என்று அனைவரும் நினைத்து நிலையில், கடைசி வரை கார்த்திக் தியாகி வீசி வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகளை எடுத்து, பஞ்சாப் அணியை தோல்வியில் தள்ளினார். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அரை சதத்தை கே எல் ராகுல் ஒரு ரன்னில் தவறவிட்டாலும், நேற்றைய போட்டி மூலம் ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியில் 20 ரன்கள் எடுத்தபோது ஐபிஎல் அரங்கில் தனது 3 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்த கே எல் ராகுல், இதன்மூலம் ஐபிஎல் தொடரில் மிக குறைந்த இன்னிங்ஸில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கிறிஸ் கெயில் 75 இன்னிங்ஸில் 3 ஆயிரம் ரன்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார். கேஎல் ராகுல் 80 இன்னிங்ஸில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 2வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 94 இன்னிங்ஸில் 3 ஆயிரம் ரன்களை கடந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kl rahul 3000 run in ipl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->