இலங்கை கிரிக்கெட் வீரர் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது! முதியவர் பலி! வீரரை கைது செய்த போலீஸ்!  - Seithipunal
Seithipunal


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குசால் மென்டிஸ். இலங்கை அணி சார்பாக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,995 ரன்களும், 76 ஒருநாள் போட்டிகளில் 2,167 ரன்களும் குவித்துள்ளார். 

குசால் மென்டிஸ் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் 64 வயது ஆன முதியவர் உயிரிழந்தார். முதியவர் பலி ஆனதை அடுத்து குசால் மென்டிஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று கொழும்புவின் புறநகர் பகுதிக்கு சென்ற மென்டிஸ் அப்போது அவரது காரை வேகமாக ஒட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, எதிரே சைக்கிளில் வந்த 64 வயது முதியவரின் மீது மென்டிஸின் கார் மோதியுள்ளது. அதில் தூக்கிவீசப்பட்ட முதியவர் துரதிஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே உயிரிழந்தார்.

முதியவர் இறந்ததையடுத்து மென்டிஸை காவல்துறையினர் கைது செய்தனர். அவர், 48 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. விபத்தின் போது வாகனத்தை ஓட்டி  வ வந்த மென்டிஸ் ஆல்கஹால் அருந்தியிருந்தாரா என்று சோதனை மேற்கொள்ளப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kausal mendis arrested after his car met accident


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal