2-வது டெஸ்ட் போட்டி : நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு.. முக்கிய வீரர் காயம் காரணமாக விலகல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இன்று காலை 9.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போட்டி துவங்குவதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. 

மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இடது முழங்கை காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லாதம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற மூன்று டி20 போட்டிகளில் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடிய நிலையில், தற்போது இடது முழங்கையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

அதேபோல இந்திய அணியில் ரஹானே,  ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா ஆகிய மூன்று வீரர்களும் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kane williamson ruled out of the second test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->