தோனியின் வார்த்தையை தவிர்த்து, வேறு ஒன்றையும் செய்யமாட்டேன் - இஷாந்த் சர்மா ஓபன் டாக்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஜனவரி ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடிய இஷாந்த் சர்மா, ஒருநாள் அணியில் இடம் பெற வேண்டும், குறிப்பாக உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில், " உலக கோப்பை யாருக்கும் தெரியாமல் இருக்காது. உலக கோப்பையை வெல்லும் அணியில் ஒரு அங்கமாக நான் இருக்க விரும்புகிறேன். அது உண்மையில் வேறு ஒரு உணர்வாகும். நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிகளில் ஆடுகிறோம். இது உலக கோப்பைக்கு சமமானது தான். 

ஆனால் நிறைய பேர் இதனை பின்பற்றுவதில்லை. ஒரு நாள் உலக கோப்பை டி20, உலக கோப்பையை பெரிய அளவிற்கு பின் தொடருகிறது. எனது முதல் 50 முதல் 60 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகும்கூட தோனி ஒரு கேப்டனாக எண்ணை ஆதரித்தார். எனக்கு பதிலாக வேறு ஒருவரை பார்க்க நேரும் என்று அவர் என்னிடம் ஒரு முறை கூட கூறியதே இல்லை. 

உண்மையை கூற வேண்டுமென்றால் 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பிறகும்கூட என்னால் சராசரி ஸ்ட்ரைக் ரேட் இதெல்லாம் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் இதைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. நான் இதனை புரிந்து கொள்ளவில்லை என்ற போதிலும், இதை நான் ஏன் நம்பியிருக்க வேண்டும்?.. இவை வெறும் எண்கள் அவ்வளவுதான்.

இந்திய பிட்ச்களில் பவுலிங் போடுகிறேன் என்றால், கேப்டன் என்னிடம் 20 ஓவர்களில் 40 ரன்கள் தான் எடுக்க விட வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது செய்வேன். ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றுவார். எனவே என் பவுலிங் சராசரி 37 என்பது எனக்கு கவலை இல்லை. கேப்டன் சொல்வதை கேட்போம் " என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ishanth Sharma Open talk about Dhoni Advice


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->