ஒரே போட்டியில் கங்குலி, கெயில், ரோஹித் உள்ளிட்ட 6 சாதனைகளை முறியடித்த இஷான் கிஷான்.! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி நேற்று காலை 11.30 மணி முதல் டாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக தவான் - இஷான் கிஷான் களமிறங்கினர். 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தவான் எல்பிடபுள்யூ ஆகி அவுட்டானார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - விராட் கோலி ஜோடி வங்கதேச பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தனர். இதில், 84 பந்துகளில் சதத்தை பதிவு செய்த இஷான் கிஷான் அதன்பிறகு ருத்ரதாண்டம் ஆடினார். இதன் மூலம் 129    பந்துகளில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இறுதியாக 131 பந்துகளில் 24 பவுண்டரி, 10 சிக்ஸர்களுடன் 210 ரன்கள் குவித்து டஷ்கின் அகமது பந்துவீச்சில் அவுட்டானார்.

இந்த போட்டியில் இரட்டை சதமடித்த இஷான் கிஷன் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 

இஷான் கிஷன் படைத்த சாதனைகள் :

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இளம் வயது வீரர் இஷான் கிஷன்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமே இரட்டை சதமாக அடித்த வீரர்.

சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், மார்டின் கப்டில், ஃபகர் ஜமான் ஆகிய வீரர்களுக்கு அடுத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த 7வது வீரர் இஷான் கிஷன்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக (126 பந்துகளில் 200 ரன்கள்) இரட்டை சதமடித்த வீரர்  இஷான் கிஷன்.

வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார். இதற்கு முன் ஷேன் வாட்சன் வங்கதேசத்தில் அடித்த 185 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 

இந்தியாவிற்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார் இஷான் கிஷன். அதன்படி,

1. இஷான் கிசான் -210 ரன்கள் (வங்கதேசம்  2022)
2. சௌரவ் கங்குலி -183 ரன்கள் (இலங்கை 1999)
3. விராட் கோலி -183 ரன்கள் (பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்தில் 2012)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ishan kishan beat 6 world records in oneday international


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->