ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றில் லக்னோ அணிக்கு எதிராக ரஜத் படிதார் அதிரடி சதம்.! 208 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி.! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றில் லக்னோ அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.

நடப்பு சீசனில் ஐ.பி.எல். போட்டித்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் முதல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியும் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன.

மழை காரணமாக காலதாமதமாக ஆட்டம் துவங்கியது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும் டு பிளசியும் களமிறங்கினர்.

டு பிளசி ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க ரஜத் பட்டிதார் அதிரடியாய் ரன்களை குவித்தார். இவருக்கு உறுதுணையாக திணேஷ் கார்த்திக்கும் சரவெடியாய் ரன்களை குவித்தார்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஜத் பட்டிதார், 49 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்தது.

இதனைத்தொடர்ந்து 208 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு லக்னோ அணி விளையாடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL Play Offs Bengaluru VS Lucknow


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->