அரை சதம் விளாசிய சுப்மன் கில்! லக்னோ அணிக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்த குஜராஜ் அணி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு 145 ரன்களைவெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் 57-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ அணியும், குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.  

அதன்படி முதலில் களம் இறங்கிய விளையாடிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான விருத்திமான் சாகா 5 ரன்களிலும், அடுத்து வந்த மாத்யூ வேட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்களிலும், டேவிட் மில்லர் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராகுல் திவாட்டியா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி சர்பில் ஆவேஷ் கான் இரண்டு விக்கட்டுகளையும், மோனிஷ் கான், ஹோல்டர் தலா ஒரு விக்கட்டும் விழ்த்தினர்.

இதையடுத்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL cricket Gujarat Lucknow match


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->